*
ஆதியே துணை
மெய்க்கல்விக் கலாசாலைத் "தமிழ்"
சதுர்யுகங்ஙளும் கண்ட மெய்ம்மை!
நம் தாய்நாடு இந்தியாவில்தான் தொன்று தொட்டு பல மெய்ஞ்ஞானிகள் அவதாரம் செய்து உள்ளார்கள். அந்த மெய்ஞ்ஞானிகள் பலர் பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அவதார வருகையை எதிர் பார்த்து உள்ளார்கள் என்பது அவர்கள் எழுதியுள்ள தீர்க்க தெரிசனகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
அப்படி முன் காலத்தில் அவதாரம் செய்த முனிவர்களை பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் குறிப்பிடும் பொழுது மிகவும் அலங்காரமான தமிழ் வார்த்தை கொண்டு அவர்களுடைய திரு நாமங்களை குறிப்பிருவார்கள். அப்படி குறிப்பிட்டுள்ள ஒரு சில மெய்ஞ்ஞானிகளின் பெயர் விபரங்கள் இங்கு அறிமுக விபரமாக தரப்படுகிறது:
யுக இறுதி நீதி தீர்ப்பு கர்த்தர், அனந்தர் குல தலை பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளியுள்ள "ஆண்டவர்கள் மான்மியம்" என்னும் அதி அற்ப்புத னூலில் ஒரு சில வரிகள்:
1. கண்ணபிரானவர்கள்:
" ...விஜய காண்டீபரின் பொருட்டாய் உதயம் செய்திராநின்ற தேவத் திருவசன பகவத் கீதை என்னும் கிரந்நத்தில் கண்ணபிரானவர்க்கள் - ... " - (பக் - 37 - ஆண்டவர்கள் மான்மியம்)
2. திருஞான சம்பந்தரவர்கள்:
" ...பொற்கிண்ண மெய்ஞ் ஞானப்பா லருந்நிய முத்துச்சிவிகை ஏற்றத் தோன்றலாகிய வரத திருஞான சம்பந்நரவர்கள் திருவாய் மிளிரிய தேவாரக் கிரந்நத்தில் - ... " (பக் - 37 - ஆண்டவர்கள் மான்மியம்)
3. சடகோபரவர்கள்:
" ... வைணவ உலகத்துப் பெராதீன தேவசிங்காசன மாகிய தூய ஆசன - திவ்விய பிரபந்நத்தில் மறுவற்ற குருகூர் மதுரகவி ஈன்ற வாடா நெறிச் சடகோபரவர்கள் கிரந்நத்தில் - ..." (பக் - 38 - ஆண்டவர்கள் மான்மியம்)
4. இயேசு நாதர்:
"...மூன்றாம் வேதத்தினது செம்மலாகிய தேவகோமான் ஏசுநாதப் பிரானவர்களும் ..." (பக் - 195 - ஆண்டவர்கள் மான்மியம்)
குறிப்பு :-
இந்ந னூலில்
அங்கம் - அங்கி - அங்கு - அங்கே
அங்ஙம் - அங்ஙி - அங்ஙு - அங்ஙே
அந்த - அந்தி - அந்தோ - சந்தை
அந்ந - அந்நி - அந்நோ - சந்நை
அஞ்ச - அஞ்சா - அஞ்சி - அஞ்சு - அஞ்சே
அஞ்ஞ - அஞ்ஞா - அஞ்ஞி - அஞ்ஞு - அஞ்ஞே
மேல்வரி-எழுத்துவாசகமாக இருந்நதைக் கீழ்வரி-சாய்ந்ந எழுத்திலிருக்கும்-அச்சர வாசகமாய் எழுதியிருப்பதைப் பிழையாயிருக்கிறதென்று எண்ணாதீர்கள். மொழிக்கு முதலில் - ன - எழுத்திருக்கும். பார்த்துப் படித்துக் கொள்ளுங்ஙள்.
அச்சர மமைத்தோன் அறுந்நுபோ னதுகண்
டமைந்நதை யமைத்து அறைந்நதிக் கிரந்நம்
அறிவினை யறிந்நோர் அறிவரிவ் வாய்மை
பாமரர் அறியார் பண்டிதர் அறிவர்
இதனை உணர்ந்நபின் எடுத்தோதிக் கிரந்நம்.
- மெய்வழிச் சபையார்
No comments:
Post a Comment