Tuesday, February 7, 2012

மெய்வழி சாலை ஆண்டவர்கள் வருகை தீர்க்க தெரிசனங்கள்

*
ஆதியே துணை

மெய்வழி சாலை ஆண்டவர்கள் வருகை தீர்க்க தெரிசனங்கள்

Part 1:



Part 2:





சர்வ கால சர்வ மதங்களின் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிய வருடம் கி.பி.1900

1. ..சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார் - இயேசு பிரான் பைபிள் [யோவான் 16-12/14]

2..இறுதிப் பிரளயத்திற்கு முன் - அல் மஹ்தி அவர்கள் ஹிஜ்ரி 1300 க்கு மேல் எனது குலத்திலேயே தான் வந்து பிறப்பார்கள் - நபிகள் நாயகம், புதுஹதிர் ரஹ்மானியா-பீ-தப்சீர் காலமே - ராப்பானியா

3..... இதே யுகமுடிவு நாளையிலே மற்றொரு புத்தர் தோன்றுவார் ....மெய்யென்னும் ஒரு மத்ததை ஸ்தாபிக்க வரும் மைத்ரேய புத்தர் - ஸ்ரீ புத்தர், - அங்கத-வம்சா

4." தீமை மலியும்போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட யுகந்தோறும் அவதரிப்பேன் - ஸ்ரீ கிருஷ்ணர் - பகவத் கீதை - (4:7-8)

5......அவதாரம் செய்து கலியுகம் 5000 க்குப் பின் எழுந்து வருகின்ற வீர போக வசந்த ராயரவர்கள் - ஸ்ரீ வீரப் பிரம்மம், கால ஞானம்

6...உன்னதங்களுக்கெல்லாம் மேலான உன்னதத்தை உடையவரும் - இறுதித் தீர்பராகிய சோசியாஸ் அவர்களே - சொரஷ்ற்றர், Zend Avesta (Favardin Yast 13: 129)

7.சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி ... ....அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும் - தானியேல், பைபிள் 7.13-14

8.தனித்தலைமை பெரும்பதி 29 வருஷங்களுக்கு மேல் [கி.பி.1900 ] வருவார்கள் ....சாலைக்கு ஆண்டவர் வருவார்கள் ...ஸ்ரீ வடலூர் வள்ளர் பிரான், [1871 A D, உண்மைப் பத்திரிகை]

யூத அன்பர்களே சேனைகளின் கர்த்தர் - கடைசி மேசியா அவதரித்துள்ளர்கள்
சைவ வைஷ்ணவ அன்பர்களே கல்கி அவதரித்துள்ளர்கள்
கிறிஸ்தவ அன்பர்களே சத்தியஆவியாகிய தேற்றரவாளர் அவதரித்துள்ளர்கள்
இஸ்லாமிய நண்பர்களே மஹதி அவதரித்துள்ளர்கள்
புத்த மத அன்பர்களே மைத்ரேய புத்தர் அவதரித்துள்ளர்கள்
சொராஷ்ற்ற மத அன்பர்களே இறுதித்தீர்பராகிய சொசியாஸ் அவதரித்துள்ளர்கள்
வள்ளளார் சன்மார்க்க சங்க அன்பர்களே தனித்தலைமை பெரும்பதி அவதரித்துள்ளர்கள்

சர்வ கால சர்வ மத தவப் பாரவாங்கலாகிய தீர்க்கதரிசிகள் மொழிந்த - அவதாரம் - புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சாலை என்னும் உத்தியோவன குருட்சேத்திரத்தில்

'சாலை ஆண்டவர்கள்',

'கலியுக முடிவு வருடம் 5000' ~ 'ஹிஜ்ரி 1300 க்கு மேல்' ~ கி.பி.1900 ல் அவதரித்துள்ளார்கள்.

No comments: