*
ஆதியே துணை
ஒரு மனிதனுக்கு மெய் குரு வேண்டும் என்ற விபரம் தற்போதைய உலகில் நடை முறையில் இல்லை. அப்படி பல வேதங்களை பயின்று வேதத்தில் உள்ள விபரம் புரிய ஒரு குருவை அடைந்தாலும் அவர் உண்மையில் பிரம்மத்தை அறிந்த மெய் குரு தானா? என்ற விபரம் யாருக்கும் தெரியாது.
அதனால் பல எதார்த்த நன் மனத்தவர்கள் போலி குருக்கள் மார்களிடம் சிக்கி இறுதியில் அநியாய மரணம் அடைகிறார்கள்.
மெய்வழி சாலையில் குரு பற்றிய இரண்டு முக்கிய கேள்விக்கு பதில் போதிக்கப் படுகிறது.
1. இறைவனை அடைய ஒரு மெய் குரு உதவி எதற்கு வேண்டும் ?
2. எப்படி போலி குருவை அடையலாம் கண்கொண்டு கொள்வது ?
மேலே குறிப்பிட்டுள்ள கேள்விக்கு யுக இறுதி நீதி தீர்ப்பு கர்த்தர், அனந்தர் குல தலை பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளியுள்ள "ஆண்டவர்கள் மான்மியம்" என்னும் அதி அற்ப்புத னூலில் ஒரு சில மெய்ஞ்ஞான விளக்கங்கள்:
"...மெய்ஞ்ஞான மகத்துக்களின் அனுக்கிரகத்தைப் பெற்றுப் பெருந்நவத் துறைந்நு சீவேசர்களாவதே அழிவிலா ஐஸ்வரிய வீடடைதலென்னும் னம்பிக்கைகொண்ட நம் இந்திய மக்களிடையில் பரம்பரையாகப் பரவி வரும் குரு பக்தியை ஆதாரமாகக்கொண்டு பல வீணர்கள் எல்லா வேதங்களையும் தான் தேறி ஒப்புக்கொண்டவனைப் போலே -
சிற்சில பொதுவார்தைகளை மட்டும் பேசிக்கொண்டு - ஏமாற்றிப் பெரியோர்களென்றும் - னான் யார் னீ யார் எனக் கூறிக்கொண்டு தாம் துறவிய ரென்றும் - கண்ணைப் படக்குப் படக்கென்று விழித்துக்கொண்டு கைச்சாடைகாட்டி வாங்கித்தின்று - எழுதிக்கொண்டு மகத்து ரிஷி என்றும் -
அது வந்நது இது போனது என அக்றிணையாகப் பேசிக்கொண்டு னான் பிரம்மமென்றும் - பொல்லாங்கு யோசனையால் தலை கவிழ்ந்துகொண்டு அந்நரத்தே ஆத்மா மிளிர்ந்த தென்றும் - பதில் கூற முடியாது மாட்டிக் கொண்டு விழிக்கின்ற னேரத்தில் - ஆத்துமாவில் இருட்டடிக்கிறதென்றும் -
தத்துவமசி அகம்பிரம்மாஸ்மி என்று கூறிக்கொண்டு பரத்தைச சார்ந்நவரென்றும் - இரட்டுக்கந்நை கம்பளங்களை அரைக்கட்டாகக் கட்டிக்கொண்டு எல்லாரையும் ஏமாற்றச் சாது என்றும் இன்னும் இவ்வாறான பல கோலங்ஙளாகத் திரியும் கள்ள ரிஷி யோகி ஞானியர்களும் கள்ள ஆலீம் சாமியார் மஸ்த்தான்ஙளும் வாய்ப் பறை யறைந்து ஆரணச்சுமையை அறுசுவைக்கும் வேதம் பொதியாய் வீம்பு வம்பினுக்கும் விற்றுக்கொண்டு னம் தேசமெங்கும் செம்மறி ஆட்டுக் கூட்டம்போலே பரந்து காணப்படுவதன்றியும் ...." (மான்மியம்-அழிகலிப் பருவம்- pg 29) (All Rights Reserved)
குறிப்பு :-
இந்ந னூலில்
அங்கம் - அங்கி - அங்கு - அங்கே
அங்ஙம் - அங்ஙி - அங்ஙு - அங்ஙே
அந்த - அந்தி - அந்தோ - சந்தை
அந்ந - அந்நி - அந்நோ - சந்நை
அஞ்ச - அஞ்சா - அஞ்சி - அஞ்சு - அஞ்சே
அஞ்ஞ - அஞ்ஞா - அஞ்ஞி - அஞ்ஞு - அஞ்ஞே
மேல்வரி-எழுத்துவாசகமாக இருந்நதைக் கீழ்வரி-சாய்ந்ந எழுத்திலிருக்கும்-அச்சர வாசகமாய் எழுதியிருப்பதைப் பிழையாயிருக்கிறதென்று எண்ணாதீர்கள். மொழிக்கு முதலில் - ன - எழுத்திருக்கும். பார்த்துப் படித்துக் கொள்ளுங்ஙள்.
அச்சர மமைத்தோன் அறுந்நுபோ னதுகண்
டமைந்நதை யமைத்து அறைந்நதிக் கிரந்நம்
அறிவினை யறிந்நோர் அறிவரிவ் வாய்மை
பாமரர் அறியார் பண்டிதர் அறிவர்
இதனை உணர்ந்நபின் எடுத்தோதிக் கிரந்நம்.
- மெய்வழிச் சபையார்
No comments:
Post a Comment