*
ஆதியே துணை
ஆதியே துணை
திருவடி தோத்திரம்
சர்வ அண்டரண்ட சராசரங்களையும் ஆட்டி வைக்கும் கர்த்தாதி கர்த்தாவே! ஏ! பரிசுத்த ஆவித் தெய்வமே! பேரின்ப நீதிச் சொர்ண எழில் பெட்டகமே! நின்னைத் தவிர இவ்வுலகில் எனக்கு, எனக்குமட்டுமென்ன எவருக்கும் ஆதரவு எவரும் கிடையாது தேவே! தங்கத் தாமரை மலர் மேனி தாங்கிய பேரின்ப எழில் நீதிப் பெட்டகமே! தங்களது பரிபூரண எழில் பெட்டகமாகிய பேரின்ப தவப்பாதத்தைத் தவிர எங்களுக்கு இவ்வுலகிலும் எவ்வுலகிலும் எவருமே இல்லை.
தேவர் கோமானாகிய நீர் எங்களுக்காக இறங்கி வந்து, சர்வ சாயுச்சிய பதவி தாங்கிய நீர் சண்டாளர்களை இரட்ச்சிக்கவும், பரிசுத்த ஆவியான நீர் பாவிகளை மீட்கவும், மகதியான நீர் மக்களை ஆட்கொள்ளவும் எழில் அவதாரம் செய்த பேரின்ப நாட்டுச் செம்மலே! எங்களது பிறவிப் பிணியைத் தீய்க்க வந்த பேரின்பத் தவமணியாகிய தங்கத் திருமேனி தாங்கிய தம்பிரானே! நீதி நெறி வழுவாது ஆட்சி புரியும், உயிர்க் கோடா கோடியான சர்வத்தையும் ஆட்டி வைக்கும் தேவேந்திர நாதாந்தத் தனியனே! சர்வத்தையும் தன்னுடைய தங்கத் திருமேனிக்குள் அடக்கிக் கொண்டு பேரின்பப் பூரண எழில் சிந்தும் மெய்வழிப் பெருங்குல நீதியே!
யாவராலும் வெல்ல முடியாத தங்களுடைய தங்கத் தாமரை மலர்ப்பாதமே எங்களது பிறவிப்பிணி நீக்கிய மருந்து - தேவே! ஆதலால், நின்னைத் தவிர வேறு எவரையும் நினையோம். எங்களது ‘யாமகதி’ என்னும் பேரின்பத் தாயாகிய தர்ம அறமோங்கும் அருளரசே! தங்களது பரிபூரண எழிற்பாதம் போற்றி வணங்குகிறோம்!
(மறை மணிகள், பக்கம் 320, னூலாசரியர்: மெய்வழி பத்மனாத அனந்நர்)
(Apologies to Lord for not writing in Salai Thamizh, this is the original extract from the book and finding it difficult to type in Salai Thamizh)
Note:- This is an extract from meivazhisalai facebook.
1 comment:
சிவன் சொத்து குல நாசம்
Post a Comment