Sunday, December 18, 2011

பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் மெய்ஞான நூல்கள்

*
ஆதியே துணை


பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் மெய்ஞான நூல்கள்:

பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளி இயற்றியுள்ள மெய்ஞான நூல்கள் மிகவும் அற்புதமான வேதாந்த விளக்கங்கள் பொதிந்தவைகளாக உள்ளன.

இதில் தனி சிறப்பு என்னவென்றல் தமிழில் விட்டு போன 33 எழுத்துக்களையும் மீண்டும் உயிர் கொடுத்து மிகவும் அற்புதமாக இயற்றியுள்ளார்கள்.

அவர்கள் வேத நூலை எதார்த்த உணர்வோடு படிக்கும் பொழுது சிறிது நிமிடத்திலேயே இதை இயற்றியுள்ளவர்கள் நிச்சயமாக ஒரு மெய்ஞானி யாகத்தான் இறுக்க முடியும் என்று தெரிந்து கொள்ளலாம், நமக்கே மனதில் படும். நம் சிறு அறிவை கொண்டு அவர்களின் நூலை எடை போட முடியாது என்பது நன்கு புரியும்.

முன்பு வந்த மெய்ஞானிகள் எத்தனையோ நூல்கள் இயற்றிஉள்ளார்கள். அனால் அவர்கள் இயற்றிய நூலின் உண்மையான மெய்ஞான விளக்கம் என்ன என்பதை யாரும் வெளிப்படையாக தெரிவித்தது இல்லை. அவர்களுக்கு இருந்த சீடர்களும் மிக குறுகிய எண்ணிக்கையிலேயே இருந்தார்கள்.

ஆனால் மெய்வழி சாலை ஆண்டவர்கள் சீடர்கள் பல ஆயிரம் பேர்கள் உள்ளார்கள். அவர்கள் சாலை ஆண்டவர்கள் இயற்றிள்ள வேத நூல்களை போற்றி புகழ்ந்து மிகவும் பய பக்தியுடன் கண்ணீர் பெருக ஓதி பயன் பெறுவது புதிதாக பார்ப்பவகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

தங்கள் சீடர்களுக்காக மெய்வழி சாலை ஆண்டவர்கள் இயற்றியுள்ள பல ஆயிரக்கணக்காக பாடல்களும் உபதேச உரைகளும் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் என்று கூறலாம். இப்படி வேதம் இயற்றிய பெரியார்கள், தாங்களே தங்கள் நூலுக்கு விளக்கமும் கொடுத்து அதில் பொதிந்துள்ள ரகசியங்களை விளக்கி நிரூபித்து காட்டியது இதுவரை இந்த உலகம் காணாத அதிசயம்.

படிக்காத பாமரர்களும் இறைவனை விளங்கிக்கொள்ளும் பாக்கியமாக அமைந்தது அவர்களின் பேரிரக்கம் தவிர வேறொன்றும் இல்லை.

இச்சிறியேன், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அரசாகிய பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் நூலை பற்றி கருத்து தெரிவித்ததில் ஏதேனும் பிழை இருந்தால் அதை அவர்களே மன்னித்துவிடுமாறு பிரார்த்திக்கிறேன்!!

பிரம்மோதய மெய்வழி சாலைஆண்டவர்கள் அருளிசெய்துள்ள
மெய்வழி வேதாந்தங்கள்:

1. ஆதிமெய் உதய பூரண வேதாந்தம்
2. ஆண்டவர்கள் மான்மியம்
3. எமபடர் அடிபடு கோடாயிதக்கூர்
4. எமபடர் அடிபடு திருமெய்ஞானக் கொரல்

http://meivazhisalaiteachings.blogspot.com/2011/07/blog-post_17.html

No comments: